திருச்சியில் நோய் கொடுமையால் எலிபேஸ்ட் மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை

திருச்சியில் நோய் கொடுமையால்  எலிபேஸ்ட் மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட சேட் முகமது.

திருச்சியில் நோய் கொடுமையால் எலி பேஸ்ட், தூக்க மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர்பகுதியை சேர்ந்த முகமது அலிஜின்னா மகன் சேட் முகமது (வயது 27).இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்து சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்கடந்த 6 மாதத்துக்கு முன்னர் திருச்சிக்கு திரும்பியுள்ளார்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்த இவருக்குஏற்பட்ட மன உளைச்சல்காரணமாக எலியை பிடிக்கபயன்படுத்தும் எலிபேஸ்ட் மற்றும் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

வீட்டில் மயங்கி கிடந்த இவரை திருச்சி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேட் முகமது உயிரிழந்தார்.இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!