திருச்சி மே தின விழாவில் கட்டுமான தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை

திருச்சியில் நடந்த மே தின விழாவில் கட்டுமான தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளை மாமன்ற உறுப்பினர் சுரேஷ் வழங்கினார்.
திருச்சியில் நடந்த மே தின விழாவில் கட்டுமான தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுரேஷ் வழங்கினார்.
மே 1ம் தேதி உழைக்கும் வர்க்கத்தின் உன்னத தினமான மே தினம் இன்று உலகம் முழுவதும் நடைபெறுகிறது. நாடு, இனம், மத, மொழி வேறுபாடின்றி தொழிலாளர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள் . அந்த வகையில் திருச்சி மாநகர் மதுரை ரோடு குப்பங்குளம் கிளை சார்பில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் கதிர் வடிவேல் தலைமையில் இன்று மே தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செல்வகுமார் மே தின கொடியேற்றினார்.
மாநிலத் துணைத் தலைவரும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மன்ற உறுப்பினருமான க. சுரேஷ் இதில் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கியும் தொழிலாளர்களை கௌரவித்தும் இனிப்பு வழங்கியும் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி செயலாளர் சையது அபுதாஹிர், பகுதி குழு உறுப்பினர் முருகேசன் வழக்கறிஞர் சீனிவாசன், ஜெகதீசன், நாச்சம்மாள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மாலை 5:30 மணி அளவில் காந்தி மார்க்கெட் நுழைவு வாயில் அருகில் இருந்து ஏ.ஐ.டி.யு.சி .திருச்சி மாவட்ட குழு சார்பில் மே தின பேரணி புறப்பட்டு தாராநல்லூர் கீரை கடை பஜாரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தேசிய செயலாளர் டி. எம். மூர்த்தி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்விலும் தொழிலாளர்கள் பங்கேற்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu