‘பிரச்சாரத்தின்போது குறைகேட்பேன்’- திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ

‘பிரச்சாரத்தின்போது குறைகேட்பேன்’-  திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ
X

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் துரை  வைகோவிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

‘பிரச்சாரத்தின்போது மக்களிடம் குறைகேட்பேன்’- என திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ கூறி உள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு ம.தி.மு.க. மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலைய வரவேற்பிற்கு பின்னர் வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் திமுக கூட்டணியில் எனக்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்த திமுக தலைவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் திருச்சி தொகுதி வேட்பாளர் என்றாலும் தமிழக முழுவதும் உள்ள மக்களுக்காக வேலை செய்ய கூடிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது.

நான் நேரடி அரசியலுக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. இப்போது தான் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஆதலால் என்னை வெற்றி பெற செய்தால் திருச்சி மக்களுக்காக மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். தேர்தல் பிரச்சாரத்தின்போது தொகுதி மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அவற்றை தீர்த்து வைக்க பாடுபடுவேன் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வேட்பாளர் துரை வைகோ அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற துரை வைகோவிற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.இதனை தொடர்ந்து துரை வைகோ தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஆதரவு கோரி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், மாவட்டக் கழகச் துணை செயலாளர் செங்குட்டுவன், ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், கு.சின்னப்பா, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள் இராஜேந்திரன், டாக்டர் ரொஹையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம்,டிடிசி சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil