திருச்சியில் அதிமுக சார்பில் 12 இடங்களில் மனித சங்கிலி போராட்டம்

திருச்சியில் அதிமுக சார்பில் 12 இடங்களில் மனித சங்கிலி போராட்டம்
X

திருச்சி ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திருச்சியில் அதிமுக சார்பில் 12 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று 12 இடங்களில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 12 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது

திமுக அரசு பதவியேற்ற நாளிலிருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதோடு; தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதற்கும்; போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான தி.மு.க அரசை கண்டித்தும்; போதைப் பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

ஶ்ரீரங்கம் தொகுதி

1.ஶ்ரீரங்கம், திருவானைக்காவல்

2.பெட்டவாய்த்தலை

மண்ணச்சநல்லூர் தொகுதி

3.சமயபுரம்

4.மண்ணச்சநல்லூர்

முசிறி தொகுதி

5.முசிறி

6.தொட்டியம்

7.காட்டுப்புத்தூர்

8.தா.பேட்டை

9.மேட்டுப்பாளையம்

துறையூர் தொகுதி

10.துறையூர்

11.உப்பிலியபுரம்

12.பாலகிருஷ்ணம்பட்டி

ஆகிய 12 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் அருகில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் உள்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future