திருச்சியில் நாளை வாக்கு எண்ணுவது எப்படி? கலெக்டர் சிவராசு பேட்டி

திருச்சியில் நாளை வாக்கு எண்ணுவது எப்படி? கலெக்டர் சிவராசு பேட்டி
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பேட்டி அளித்தார்.

திருச்சி மாவட்டத்தில் நாளை வாக்குகள் எண்ணுவது எப்படி என்பது பற்றி கலெக்டர் சிவராசு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில், மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 57.25 சதவீதமும் , 5 நகராட்சிகளில் 70.44 சதவீதமும், 14 பேரூராட்சிகளில் 74.87 சதவீதம் என மொத்தம் 61.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை காலை வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று பேட்டியில் கூறியதாவது,..

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8.00 மணிக்கு 8- ஏ.ஆர்.ஓக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. அதேபோல் நகராட்சிக்கு 3 ஏ,ஆர்,ஓக்கள், பேரூராட்சிக்கு 2- ஏ.ஆர்.ஓக்கள் உள்ளனர். மேலும் 7 மையங்களில் பிரஸ் மற்றும் மீடியாக்களுக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டு அதில் டி.வி. மற்றும் சி.சி.டி.வி. காட்சிகள் காண்பதற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை ரவுண்டு முடிந்தவுடன் அந்தந்த ஏ.ஆர்.ஓ.க்கள் மூலம் தகவல் தெரிவிக்க வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 51 ஆயிரத்து 065 ஆகும். அதில் மாநகராட்சியில் மட்டும் 4 லட்சத்து 45 ஆயிரத்து 257 வாக்குகளும், நகராட்சியில் 97 ஆயிரத்து 189 வாக்குகளும், பேரூராட்சியில் 1 லட்சத்து 08 ஆயிரத்து 619 வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு காவல்துறை சார்பில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேபோல ஒவ்வொரு வார்டுக்கு முன்பு தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. மாநகராட்சியில் வார்டுக்கு 50 முதல் 60 வரை தபால் வாக்குகள் வரலாம். அதேபோல நகராட்சிக்கு ஒரு வார்டுக்கு 12 தபால் வாக்குகளும் பேரூராட்சிக்கு 11 தபால் வாக்குகள் வருகிறது. எனவே 5 நிமிடத்தில் தபால் வாக்குகளை எண்ணிவிட்டு அடுத்து இ.வி.எம். மிஷினில் பதிவான வாக்குகளை எண்ண ஆரம்பித்துவிடலாம். மாநகராட்சியை பொறுத்தவரை 18 வாக்கு மையங்கள் இருக்கிறது. அதில் ஒரு வார்டுக்கு 2 சுற்றுகள் என 9 மேஜைகள் போடப்பட்டு உள்ளது.

முதல் சுற்று எண்ணுவதற்குள் தபால் வாக்குகள் எண்ணி முடித்தவுடன் தான் இரண்டாவது சுற்றுக்கு செல்ல வேண்டும் என தேர்தல் ஆணையம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தபால் ஓட்டுகள் அனுப்பியது 3,524 உள்ளது. மேலும் நாளை வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்தப் பேட்டியின் போது திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் ஆகியோர் இருந்தனர்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!