புதிய செல்வநகர் பகுதியில் வேட்பாளர் ராமதாஸ் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

புதிய செல்வநகர் பகுதியில் வேட்பாளர் ராமதாஸ் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
X

தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ்க்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

புதிய செல்வநகர் பகுதியில் வேட்பாளர் தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி 55வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக சிவா ஆப்டிகல்ஸ் வெ. ராமதாஸ் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் ராமதாஸ் இன்று தனது வார்டுக்கு உட்பட்ட புதிய செல்வநகர் பகுதியில் வீடு வீடாக வாக்கு கேரித்தார். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்குறுதி அளித்து தனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.


சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். சில இடங்களில் ஆளுர மாலைகளும் அணிவித்து கட்சி நிர்வாகிகள் வாழ்த்து கூறினார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!