திருச்சி பீமநகரில் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி காயம்

திருச்சி பீமநகரில் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி காயம்
X

திருச்சி பீமநகரில் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி காயம் அடைந்தார்.

திருச்சியில் வீடு இடிந்து விழுந்ததால் மூதாட்டி காயம்.

திருச்சி பீமநகர் 47- வது வார்டு மார்சிங்பேட்டை மேட்டுத்தெருவில் ரோசிலி (வயது 75) என்பவர் தனது மகன் ராஜாவுடன் வசித்து வருகிறார்.திருச்சியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக அவரது வீடு இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டிகாயமடைந்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக உயிர்பலிஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. மாநகரசெயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்டஅலுவலர்கள் அரசு நிதி அளிப்பதாக உறுதி அளித்து சென்றுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!