திருச்சியில் ஓட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டிய 3 பேருக்கு வலைவீச்சு

திருச்சியில் ஓட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டிய   3 பேருக்கு வலைவீச்சு
X
திருச்சியில் பைக்கில் சென்ற ஓட்டல் ஊழியருக்கு அரிவாள் வெட்டு. மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

திருச்சி ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் பெரியசாமி(வயது 21). கருமண்டபம் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருறார்.இந்நிலையில் அதே பகுதியைசேர்ந்த கிருஷ்ணலிங்கம், விஜயகுமார் ஆகியோருடன் பெரியசாமி ஒரே பைக்கில் சென்றார்.அப்போது பிராட்டியூர் அருகே சென்றபோது இவர்களை வழிமறித்து 3 பேர் கொண்ட கும்பல் பைக்கை தடுத்து நிறுத்தி கஞ்சா இருக்கிறதா? என்று கேட்டுள்ளனர்.

இதற்கு யாரிடம் கஞ்சா கேட்கிறீர்கள் என்று பெரியசாமி உட்பட 3 பேர் தட்டிகேட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பெரியசாமியை 3 பேரில் ஒருவன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளான். இதனைபார்த்து அவருடன் வந்த நண்பர்கள் 2 பேரும் தப்பி ஓடினர்.

இதையடுத்து படுகாயமடைந்த பெரியசாமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தீரன்நகரில்உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குவெட்டுப்பட்ட முதுகில்20 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture