'இல்லம் தேடி கல்வி திட்டம்'பற்றி திருச்சியில் பயிற்சி முகாம்
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி, இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும்பொருட்டு ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்த பிறகு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம்வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த "இல்லம் தேடிக் கல்வி திட்டம்"அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் அக்குடியிருப்பு பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள். ஓன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு போதிக்கும் தன்னார்வலர்கள் பணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 6 முதல் 8 வகுப்பு வரை போதிக்கும் தன்னார்வலர்கள் ஏதாவது ஒரு பட்டம்பெற்றிருக்க வேண்டும். தன்னார்வலர்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளிலேயே இச்சமூகப்பணியினை மேற்கொள்ளலாம்.
இல்லம் தேடிக் கல்வி திட்டமானது திருச்சி உட்பட 12மாவட்டங்களில் பரீட்சார்த்த முறையில்நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு மாநில அளவிலானபயிற்சி 29.10.2021 மற்றும் 30.10.2021 ஆகிய இரண்டு நாட்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விமாநிலத்திட்ட இயக்ககத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் இன்று மாவட்டஅளவிலான பயிற்சி திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர்மேல் நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu