ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை கொடி மற்றும் மாநில நிர்வாகிகள் அறிமுக விழா

ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை கொடி மற்றும் மாநில நிர்வாகிகள் அறிமுக விழா
X

திருச்சியில் இந்து தர்ம பாதுகாப்பு பேரவை கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை கொடி மற்றும் மாநில நிர்வாகிகள் அறிமுக விழா திருச்சியில் நடந்தது.

ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையின் கொடி மற்றும் மாநில நிர்வாகிகள் அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையின் மாநிலத் தலைவர் ஜெகன்நாதன் தலைமையில் நடைபெற்ற அறிமுக விழாவினை மாநில மகளிரணித் தலைவி ஜே. பாக்கியலெட்சுமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தஞ்சை மாவட்ட மகளிரணி தலைவி வாசுகி ராமமூர்த்தி பக்தி பாடலை பாடி வரவேற்றார்.மாநில பொதுச் செயலாளர் சாய்சரவணன்,மாநில பொருளாளர் ஜெகதீசன்,மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் இராமகிருஷ்ணன்,ஆகியோர் மாநில நிர்வாகிகளாக தேர்வு செய்து அறிமுகம் செய்யபட்டார்கள்.அதைத்தொடர்ந்து ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையின்,(மஞ்சள், காவி கலர் கொடி நடுவில் வேல்சின்னம் பதித்த) கொடியையும், பெயர் பலகையும் அறிமுகப்படுத்தினர். அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும் நியமன கடிதம் மாநில தலைவரால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாக 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமயவகுப்பு மூலம் நம் புராண இதிகாச உண்மையான வரலாறுகளை பயிற்றுவிப்பது.

தற்சார்பு வாழ்வியல் சுதேசி பொருட்களை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல்.நாட்டில் உள்ள அனைத்து திருத்தலங்களில் குறைந்தது ஒரு கால பூஜை நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்து மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பதே அதன் பயனாக கருதுதல்.ஹிந்து சகோதர சகோதரிகளுக்கு உறவுப் பாலமாக இருந்து அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட வேலைவாய்ப்பு, வியாபார தொழில் மையமாக செயல் படுத்துதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிரதாப், விசுவநாதன், சசிகுமார், தியாகு உள்ளிட்ட அனைத்து மாநில, மாவட்ட, தொகுதி, வட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story