கிராம சாலையின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

கிராம சாலையின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
X

திருச்சி அருகே அமைக்கப்பட்ட கிராமசாலையின் தரத்தை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆர். கிருஷ்ணசாமி ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் கிராம சாலையின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி நபார்டு மற்றும் கிராம சாலைகள் வட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொத்தப்பட்ட கொசூர் சாலை முதல் வையமலைப்பாளையம் வரை3 கி.மீ. நீளத்திற்கு தார்சால அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையின் தரத்தை திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டம் கண்காணிப்பு பொறியாளரும், உள் தணிக்கை அதிகாரியுமான முனைவர் ஆர். கிருஷ்ணசாமி ஆய்வு செய்தார்.

அப்போது கோட்டபொறியாளர் வடிவேல், மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர். இந்த ஆய்வின்போது தரத்தை துல்லியமாக அறிய உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டது.

Tags

Next Story
ai automation in agriculture