திருச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

திருச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
X

திருச்சி கருமண்டபத்தில் கொள்ளை நடந்த வீடு.

திருச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 11-வது தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். இவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பொங்கல் விழாவை கொண்டாட குடும்பத்துடன் பெரம்பலூர் சென்று விட்டு நேற்று இரவு தனது வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரின் படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பீரோவை பார்த்ததில், அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம், சமையல் அறையில் வைத்திருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றது தெரியவந்தது.


இது குறித்து துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயின் உதவியோடு வீடு மற்றும் அந்த பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!