தற்கொலைக்கு முயன்ற பெரம்பலூர் போலீஸ் ஏட்டு திருச்சியில் உயிரிழப்பு

தற்கொலைக்கு முயன்ற பெரம்பலூர் போலீஸ் ஏட்டு திருச்சியில் உயிரிழப்பு
X

தற்கொலை செய்து கொண்ட போலீஸ் ஏட்டு செல்வராஜ்.

தற்கொலைக்கு முயன்ற பெரம்பலூர் போலீஸ் ஏட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, வீராக்கன் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். மேலும் செல்வராஜ் தனது குடும்பத்துடன் பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் செல்வராஜின் மனைவி மாலதி கடந்த 1 வருடத்துக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் செல்வராஜ் தனது மகள், மகனை கவனித்துக் கொண்டு பணிக்கு சென்று வந்தார்.

மேலும் மனைவி இறந்த சோகத்துடன் காணப்பட்ட செல்வராஜ் கடந்த 12-ந்தேதி நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு உயிருக்கு போராடினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்டிருந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாகஉயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீஸ் ஏட்டு உயிரிழந்த சம்பவம் சக போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு