இளம்பெண்ணை கணவனுடன் சேர்ந்து வாழ விடாமல் துன்புறுத்துவதாக புகார்

இளம்பெண்ணை கணவனுடன் சேர்ந்து வாழ விடாமல் துன்புறுத்துவதாக புகார்
X

பைல் படம்.

இளம்பெண்ணை கணவனுடன் சேர்ந்து வாழ விடாமல் துன்புறுத்தியதாக மாமனார்-மாமியார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருச்சி பாலக்கரை காஜா பேட்டை புது தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் மனைவி முத்து ராஜேஸ்வரி (வயது28 )இந்த தம்பதிக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் முத்து ராஜேஸ்வரி தனது வீட்டில் இருந்தவாறு டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் என்ற தனியார் ஐ.டி. கம்பெனியில் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் வேலை பார்த்து வருகிறார். ஆனால் இவர் வேலை பார்க்கும் சம்பளத்தை தனது மாமனாரும், மாமியாரும் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும், ஆண் குழந்தையா பெற்றிருக்க? பெண் குழந்தை தானே பிறந்தது என்று முத்து ராஜேஸ்வரியை அவர்களது உறவினர்களுடன் சேர்ந்து அடிக்கடி திட்டி கணவருடன் வாழ விடாமல் இரவோடு இரவாக அடித்துத் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி, முத்து ராஜேஸ்வரியின் கணவர் ஹரிஹரன், மாமியார் சீனியம்மாள், மாமனார் குருசாமி, ஹரிஹரனின் உறவினர் ரமேஷ் குமார் மற்றும் திவ்யா ஆகிய 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!