பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் வரவேண்டாம்: அமைச்சர் கே.என்.நேரு

பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் வரவேண்டாம்: அமைச்சர் கே.என்.நேரு
X

அமைச்சர்  கே.என்.நேரு

எனது பிறந்த நாளை கொண்டாட வில்லை. எனக்கு வாழ்த்து சொல்ல யாரும் நேரில் வரவேண்டாம் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

தி.மு.க. முதன்மைச் செயலாளரும் தமிழக நகர்புறவளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொடர்மழை காரணமாகவும் அடுத்த 4, 5 நாட்களுக்கு கடுமையான மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதாலும், வரும் 9-ந்தேதி அன்று எனது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்ப வில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அன்றைய தினம் நான் ஊரில் இல்லாத காரணத்தால் எனக்கு வாழ்த்து சொல்வதற்காக யாரும் நேரில் வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

Tags

Next Story
ai marketing future