கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் குருப்பெயர்ச்சி பரிகார ஹோமம்

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் குருப்பெயர்ச்சி பரிகார ஹோமம்
X

கல்லுக்குழி ஆஞ்சநேயர்

Kallukuli Anjaneyar Temple-திருச்சிராப்பள்ளி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் குருப்பெயர்ச்சி பரிகார ஹோமம் நாளை நடைபெறவுள்ளது

Kallukuli Anjaneyar Temple-வாக்கிய பஞ்சாங்கப்படி குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நாளை (சனிக்கிழமை) பிரவேசிக்கிறார். அதனை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் குருப்பெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை நடக்கிறது.

அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை கணபதி பூஜை, ஹோமம், குரு பரிகார ஹோமம், ஆஞ்சநேயர் காயத்ரி ஹோமம், பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.

மாலை 6 மணிக்கு மேல் நவக்கிரகங்கள் அபிஷேக ஆராதனை நடக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story