திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகை திறப்பு

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகை திறப்பு
X
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகையை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி திறந்து வைத்து  குத்துவிளக்கேற்றினார்.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகையை ஐகோர்ட்டு நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

திருச்சி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கான விருந்தினர் மாளிகை கட்டப்பட்டு உள்ளது. இந்த விருந்தினர் மாளிகையைஇன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் விழா சிறப்புரையாற்றினார்கள். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே பாபு, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, தலைமை குற்றவியல் நீதிபதி சாந்தி ஆகியோரும் வழக்கறிஞர்களும், நீதித்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!