திருச்சி குறை தீர்க்கும் கூட்டத்தில் 344 மனுக்கள் மீது நடவடிக்கை

திருச்சி குறை தீர்க்கும் கூட்டத்தில் 344 மனுக்கள் மீது நடவடிக்கை
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

திருச்சியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் 344 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல், திருமண உதவி தொகை தொடர்பாக மொத்தம் 344 மனுக்கள் கொடுக்கப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமார்,சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் அம்பிகாபதி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story