திருச்சி மாவட்ட குறைதீர்க்கும் கூட்டத்தில் 632 மனுக்கள் மீது நடவடிக்கை

திருச்சி மாவட்ட குறைதீர்க்கும் கூட்டத்தில் 632 மனுக்கள் மீது நடவடிக்கை
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த  குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சிவராசு பொதுமக்களிடம்  இருந்து மனுக்களை பெற்றார்.

திருச்சி மாவட்டத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 632 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியகரத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும் நிலம் தொடா்பான 132 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 12 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி98 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ்வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 34 மனுக்களும், புகார் தொடர்பாக 68 மனுக்களும், கல்வி உதவித் தொகை வங்கிக் கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோhp 28 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம், சலவைப்பெட்டி தொடர்பாக 82 மனுக்களும், பென்சன், நிலுவைத் தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதியப் பயன்கள் மற்றும் தொழிலாளர்நல வாரியம் தொடர்பாக 02 மனுக்களும், 114 இதர மனுக்களும் என மொத்தம் 632 மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் அம்பிகாவதி உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்