திருச்சி மாவட்டத்தில் 24ம் தேதி கிராம சபை கூட்டம்- கலெக்டர் சிவராசு தகவல்
பைல் படம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான 24.04.2022 அன்று நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வாக்காளர்கள் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கலெக்டர் சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருச்சி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை சூழல், வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்துதல், கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வயதினரும் உடல்நலத்துடன் நலவாழ்வு வாழ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அனைத்து குழந்தைகளும் வாழவும், வளரவும் பங்கேற்கவும் தேவையான பங்களிப்பு அளித்து அவா;களின் முழுத்திறன்கள் வெளிகொணர்தல், அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட தரமான குடிநீர் வழங்குதல், முறையான நீர் மேலாண்மை மற்றும் வேளாண்மை பணிகளுக்கு தேவையான நீரை அளித்து நீர் சார்ந்த சூழலை பாதுகாத்தல். இயற்கையின் வளங்கள் மற்றும் பசுமையை நம்முடைய எதிh;கால சந்ததிகளுக்கு கொடுக்கும் வகையில் பாதுகாத்தல் வீடு, தேவையான அடிப்படை வசதிகள் வழங்குதல், தகுதியுடைய அனைவரையும் சமூக பாதுகாப்பு திட்டத்தில் இணைத்தல். பாலின சமுத்துவ அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை வலிமைப்படுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல். நிலைத்த வளர்ச்சி ஏற்படுத்தி அதன் பயன்களை பெறும் வகையில் இடைவெளியை குறைத்து தரமான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை தயாரித்தல், நிலைத்த வளர்ச்சி அடைவதில் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிக பங்கு உள்ளதால் அவர்களை முழு உத்வேகத்துடன் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல், உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான 24.04.2022 அன்று காலை 11.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து வாக்காளர் பெருமக்களும் கலந்து கொண்டு ஊராட்சிகளில் கிராம சபை நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu