திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு பணி நிறைவு விழா

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு பணி நிறைவு விழா
X

பணி நிறைவு பெற்ற ஆசிரியைக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

திருச்சி செந்தண்ணீர்புரம் ஓய்வு பெற்ற மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரி்யையாக பணிபுரிந்து வந்தவர் ஜெயந்தி . அவர் தற்போது பணி நிறைவு பெற்றார்.

இதனை தொடர்ந்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் எழியரசி தலைமை தாங்கினார். மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் , பேராசிரியர் அருணாசலம் , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி வள மைய மேற்பார்வையாளர் முஸ்தபா, மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ,பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் தியாகராஜன் மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தனலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் அறிவியல் ஆசிரியர் ஜெயந்தி அவர்களை பாராட்சி வாழ்த்துரை யாற்றினார்கள்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவியர் பணி நிறைவு பெற்ற தங்கள் ஆசிரியையிடம் வாழ்த்து பெற்றனர்.

மேலும் அவர்களின் உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் எஸ்.எம்.சி தலைவி சகுந்தலா,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி அமுதா மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அவருக்கு சால்வை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
photoshop ai tool