பயணிகளுடன் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்: போக்குவரத்து பாதிப்பு

பயணிகளுடன் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்: போக்குவரத்து பாதிப்பு
X

திருச்சி தென்னூரில் அரசு டவுன் பஸ் பள்ளத்தில் சிக்கியது.

திருச்சியில் பயணிகளுடன் பள்ளத்தில் அரசு பஸ் சிக்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருச்சி புத்தூர் நால்ரோட்டில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று இன்று மாலை சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சுமார் 60 பயணிகள் இருந்தனர்.தென்னூர் அரசமரத்தடி பேருந்து நிறுத்தத்திற்கு சற்று முன்பாக சிவன் கோவில் அருகே வந்த போது அந்த அரசு பேருந்து திடீர் என சாலையோர பள்ளத்தில் சிக்கி பகுதியளவு சாய்ந்த நிலையில் சாலையின் நடுவே நின்றது.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து சாய்ந்துவிடாமல் சிறிது நேரத்திற்கு பிறகு நிலைநிறுத்தப்பட்டு பள்ளத்தில் இருந்து மீண்டது. பயணிகளை பெரும் அச்சத்திற்குள்ளாகிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளத்தின் அருகே நடுநிலைப்பள்ளி இருப்பதால் இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி உடனடியாக பள்ளத்தை சரிசெய்து கொடுத்திட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!