திருச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் காருடன் பறிமுதல்

திருச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் காருடன் பறிமுதல்
X

திருச்சியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று 7 5 2024 அன்று பொது மக்களிடம் இருந்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் ஒத்துழைப்போடு திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் காவல்துறையும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் இணைந்து ராஜஸ்தானை சேர்ந்த ஜிஜேந்திரகுமார் மற்றும் ஞானசேகர் மற்றும் ஜெயச்சந்திரன் என்பவரிடம் இருந்து 97 கிலோகிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் குட்கா பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டு ஒரு சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு மூன்று நபர்கள் மற்றும் இரு வாகனத்தையும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி மகாதேவன், வடிவேல் பொன்ராஜ் ,அன்புச்செல்வன், சண்முகசுந்தரம் உடன் இருந்தனர்

மேலும் பொதுமக்களும் இதுபோன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தாங்கள் அருகாமையில் உள்ள கடைகளிலோ அல்லது வீடுகளிலோ பதுக்கி வைக்கப்பட்டு இருந்தால் கீழே கொடுக்கப்பட் ட எண்களுக்கு தகவல் கொடுக்கலாம் தகவல் கொடுப்பவரின் விபரம் ரகசியம் காக்கப்படும் 99449595959444042322

என திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!