தமிழக கவர்னர் ஆர். என். ரவி திருச்சி நிகழ்ச்சி முடித்து சென்னை சென்றார்

தமிழக கவர்னர் ஆர். என். ரவி திருச்சி நிகழ்ச்சி முடித்து  சென்னை சென்றார்
X

கவர்னர் ஆர்.என். ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

2 நாள் பயணம் முடிந்து தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

தமிழக கவர்னர் ஆர்என் ரவி 2 நாள் பயணமாக கடந்த புதன்கிழமை திருச்சி வந்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கி இருந்த கவர்னர் ரவி நேற்று காலை தனது மனைவியுடன் ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு பெற்றவர்களுக்கு பட்டம் வழங்கினார். முன்னதாக நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணமடைந்த இந்திய முப்படை தளபதி பிபின் ராவதின் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் 2 நாள் பயணம் முடிந்து இன்று திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்ல சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு பூங்கொத்து வழங்கி வழியனுப்பி வைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!