கோஷ்டி பூசலின் உச்ச கட்டம்- திருச்சி காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு
திருச்சி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மெயின்கார்டுகேட் பகுதில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமாக விளங்கும் அருணாச்சலம் மன்றத்தை இன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இழுத்து பூட்டியுள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கூறுகையில்,நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சீட்டுக்கு குறைந்தது 10 வார்டுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைய முன் வைக்காமல் தற்போது தி.மு.க. ஒதுக்கியுள் 4 அல்லது 5இடங்களில் மட்டும்காங்கிரஸ் கட்சிபோட்டியிட தயாராகிஉள்ளது.
அதிலும் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தனித்துப் போட்டி இடுகையில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து காத்துக் கிடந்தநிலையில் இன்று கட்சியில் உள்ள தலைவர்கள் மட்டும்ஒரு சில வார்டுகளில் போட்டியிடுவது கண்டிக்கத்தக்கசெயல். மேலும்தேர்தல் பணியாற்ற இதுவரை திருச்சி மாநகர் மாவட்டகாங்கிரஸ் கமிட்டிதலைவர் ஜவஹர் கட்சி அலுவலகத்திற்கு வராமல், இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், நாங்கள் வெளியில் இருந்து கட்சிக்காரர்களுக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே தற்போது திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தையே தொண்டர்கள் இழுத்து பூட்டு போட்டனர். இது குறித்து தகவலறிந்த மாநகர் மாவட்ட தலைவர் கட்சி அலுவலகத்திற்கு வருவதாக கூறியதையடுத்து சிறிது நேரத்திற்கு பின்னர் நிர்வாகிகள் பூட்டிய அலுவலகத்தை மீண்டும் திறந்து அமர்ந்துள்ளனர். இதனால் திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu