திருச்சியில் வீடு புகுந்து திருடிய கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பாலியல் துன்புறுத்தல் செய்தும் தாலி செயினை பறித்தும், தமிழகம் ழுமுவதும் பல்வேறு மாவட்டங்களில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடிப்பதை தொழிலாக கொண்ட நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல்; சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த 27.09.22ந்தேதி திருச்சி கே.கே.நகரில் வீடு புகுந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணின் கைகளை கட்டிபோட்டு, அவரிடம் இருந்து 1¼ பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டும், அவரது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த முகமது உசேன் (வயது28) என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் எதிரி முகமது உசேன், கே.கே நகரில் அதிகாலை வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தும், அவரதுகழுத்தில் அணிருந்த 6½ பவுன் தங்க தாலி செயினை பறித்தும், ஆசாத் நகரில் அதிகாலை துளசி இலை பறித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சுமார் 9 பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்ற வழக்கு உட்பட முகமது உசேன் தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுப்பட்டதாக 30 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
எனவே முகமது உசேன் தொடர்ந்து பெண்களிடம் பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், பெண்களிடம் கத்தியை காட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால் முகமது உசேனின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பாpசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், முகமது உசேனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் உள்ள முகமது உசேனிடம் குண்டர் தடுப்பு சட்டம் ஆணை இன்று சார்வு செய்யப்பட்டது.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu