திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
திருச்சியில் கத்தியை காட்டி டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

முன்விரோதம் காரணமாக கொலை செய்த குற்றவாளி டாஸ்மாக் கேசியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் ரவுடிகள் மற்றும் சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த 17.09.22-ம்தேதி பாலக்கரை மணல்வாரித்துறை ரோடு டாஸ்மாக் அருகில் நடந்து சென்ற டாஸ்மாக் காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ.1000த்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சகாயம் மகன் ஜஸ்டின் கிருஸ்துராஜ்(வயது 24)என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் ரவுடி ஜஸ்டின் கிருஸ்துராஜ்; மீது பாலக்கரை காவல் நிலையத்தில் முன்விரோதம் காரணமாக நண்பனை கொலை செய்ததாக ஒரு வழக்கும், மேலும் திருட்டு மற்றும் பொதுமக்களை கத்தியை காட்டி அச்சுறுத்தி பணம் பறித்ததாக 2 வழக்குகள் உட்பட எதிரி மீது 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

எனவே குற்றம் சாட்டப்பட்ட ஜஸ்டின் கிருஸ்துராஜ் என்பவர் தொடா;ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், திருட்டு மற்றும் கத்தியை காட்டி பணம் கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவார் என விசாரணையில் தெரியவந்தது. எனவே மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடா;ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள ஜஸ்டின் கிருஸ்துராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், திருட்டு, வழிப்பறி, போதை பொருள் கடத்தல், பெண்குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்கள் மீது இதுபோல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த நான்கைந்து மாதங்களில் மட்டும் இதுபோல் பலர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!