திருச்சியில் கல்லூரி மாணவர்களை தாக்கியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் கல்லூரி மாணவர்களை தாக்கியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
திருச்சியில் கல்லூரி மாணவர்களை தாக்கியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி வயலூர் ரோட்டில் இரண்டு கல்லூரி மாணவர்களை அசிங்கமாக திட்டி தாக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த குற்றவாளியை போலீசார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர்.

திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், கத்தியை காண்பித்து வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொலை குற்றவாளிகள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

கடந்த 14.11.22-ந்தேதி புத்தூர் நான்கு ரோடு அருகில், ஹோட்டலில் உணவருந்த வந்த கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.850 பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காந்திமார்க்கெட் உப்பிலியதெருவை சேர்ந்த புலிதேவன் (வயது 23,) என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் புலிதேவன் மீது சமையல் வேலை செய்பவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக ஒரு வழக்கும், 5 அடிதடி வழக்குகளும், கத்தியை காண்பித்து பணம் பறித்ததாக 2 வழக்குகள் உட்பட 9 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

எனவே புலிதேவன் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அடிதடியில் ஈடுபடுவதும், பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது என குற்றசெயல்களை தொடர்ந்து செய்பவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட நபரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் புலிதேவனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள புலிதேவனிடம் குண்டர் தடுப்பு சட்டத்திற்கான ஆணை இன்று சார்வு செய்யப்பட்டது.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்