திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.30 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.30 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது
X

திருச்சி விமான நிலையம்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.30 கோடி மதிப்பு தங்கத்தை பறிமுதல் செய்து 5 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, இந்த விமானத்தில் வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த முகமது சப்ரோஸ், ஆவடியை சேர்ந்த அப்துல் ரசாக், சிவகங்கையை சேர்ந்த முருகன், அரியலூரை சேர்ந்த சித்ரா கண்ணன், நாகப்பட்டினத்தை சேர்ந்த அமுதா வடிவேலு ஆகிய 5 பேர் தங்கள் உடல் மற்றும் உடைமைகளில் ரூபாய் 3.30 கோடி மதிப்புள்ள 6.கிலோ 650 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தி வந்த 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!