பவுடர் டப்பாவில் கடத்தி வந்த ரூ.22.61 லட்சம் தங்கம் பறிமுதல்

பவுடர் டப்பாவில் கடத்தி வந்த ரூ.22.61 லட்சம் தங்கம் பறிமுதல்
X

திருச்சி விமான நிலையம் 

தூளாக்கி பவுடர் டப்பாவில் கடத்தி வந்த ரூ.22.61 லட்சம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்.

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகள், தங்கத்தை தூளாக்கி பவுடர் டப்பாவில் கலந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.22.61லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!