திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக விமான பணியாளர் கைது

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக விமான  பணியாளர் கைது
X

திருச்சி விமான நிலையம் (பைல் படம்)

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த விமான பணியாளர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்தும் பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் தங்கம் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த விமானத்தில் பணியாளராக பணிபுரிந்த சுரேந்திரன் (வயது 33) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர்.

அப்போது அவர் இடுப்பில் துணி வடிவில் அமைக்கப்பட்ட பெல்ட் அணிந்து இருந்தார். அதனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் சுரேந்திரன் 13/4 கிலோ தங்கத்தை அதில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பணியாளர் சுரேந்திரனை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ரூ.87.5 லட்சம் ஆகும்.

Tags

Next Story
the future of ai in healthcare