தொண்டர்களுடன் சென்று அ.தி.மு.க.வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு வாக்கு சேகரிப்பு

தொண்டர்களுடன் சென்று அ.தி.மு.க.வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு வாக்கு சேகரிப்பு
X

தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்தார் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு.

கருமண்டபம் வசந்தநகர் பகுதியில் தொண்டர்களுடன் சென்று அ.தி.மு.க.வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாநகராட்சி 55வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக ஏ. ஜோசப் ஜெரால்டு போட்டியிடுகிறார்.

வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு இன்று காலை கருமண்டபம் ஜெயநகர் விஸ்தரிப்பு பகுதியிலும், மாலை முதல் இரவு வரை வசந்த நகர் பகுதியிலும் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.


அப்போது அங்கு வசிப்பவர்கள் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவது பற்றி எடுத்து கூறினார்கள். அதற்கு வேட்பாளர் ஜெரால்டு என்னை நீங்கள் வெற்றி பெற செய்தால் அனைத்து தெருக்களிலும் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தருவேன், அனைத்து மண் சாலைகளையும் தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார். அவருடன் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture