திருச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய சமோசா வியாபாரி போக்சோவில் கைது

திருச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய சமோசா வியாபாரி போக்சோவில் கைது
X

கைது செய்யப்பட்ட மோகன்

திருச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய சமோசா வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்

திருச்சி தென்னூர் அன்னை சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 25). இவர் தனது வீட்டில் சமோசா செய்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த பள்ளி மாணவி ஒருவரை மோகனின் மனைவி அடிக்கடி பார்க்க வந்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திய மோகன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நட்பாக பழகி உள்ளார். இவர்களது பழக்கம் நீண்ட நாட்களாக நீடித்தது. இந்நிலையில் மாணவியிடம்சிறிது மாற்றம் ஏற்பட்டதை இவர்களது பெற்றோர்கள் கவனித்தனர். உடனே அவரை திருச்சிஅரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துசென்றனர். அங்கு அந்த மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 3 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் இதற்கு யார் காரணம்? என்று விசாரித்தனர். அதற்கு அவர் அதே பகுதியில் வசிக்கும் மோகன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த வேதவள்ளி வழக்குப்பதிவு செய்து மோகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!