பெண் குழந்தைகள் தினம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

பெண் குழந்தைகள் தினம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு
X

திருச்சி கண்டோன்மெண்ட் அரசு உதவி பெறும் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண் குழந்தைகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சியில், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச பெண் குழந்தைகள் தினம் , அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி அரசு உதவி பெறும் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண் குழந்தைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பெண் குழந்தைகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவரிடம், பள்ளி மாணவி தங்களுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்களில் ஏடுகள் எடுத்துக் கொள்வதாகவும், தரமான புத்தகங்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர், இனி வரும் காலங்களில் தரமான புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

பின்னர், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவிகளுக்கு, அவர் பரிசுகளை வழங்கினார். குழந்தைத் திருமணம் நடைபெற அனுமதிக்க மாட்டோம், குழந்தைகளின் கல்வி தொடர விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், உரிய உதவி புரிவோம் என உளமார உறுதி அளிக்கிறோம் என்ற குழந்தைகள் திருமணம் தடுத்தல் உறுதிமொழி பேனரில், தனது முதல் கையெழுத்தை போட்டு, கையெழுத்து நிகழ்ச்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்