திருச்சியில் 23ம்தேதி கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருச்சியில் 23ம்தேதி கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X
திருச்சியில் வருகிற 23ம்தேதி கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமார் தலைமையில் வருகிற 23ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு சிலிண்டர் நுகர்வோர்கள் சிலிண்டர் கிடைப்பதில் நிலவும் தாமதம், முறைகேடுகள் பற்றி புகார் தெரிவிக்கலாம். மேலும் இக்கூட்டத்தில் நுகர்வோர் தவிர அங்கீரிக்கப்பட்ட தன்னார்வ அமைப்புகள்,நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பயன் அடையலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி