சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிப்பு

திருச்சியில் தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர் நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சுதந்திரப் போராட்டத்தின் போது கொங்கு மண்டலத்தில் ஆயுதப் போர் மூலம் வெள்ளையர்களை கதிகலங்க வைத்த முக்கிய தளபதிகளில் தீரன் சின்னமலையும் ஒருவர். சுதந்திர போராட்ட வீரரான இவர் ஆங்கிலேய தளபதி கர்னல் ஹரீஸ் துரை நேருக்கு நேர் சந்தித்து வாள் வீச்சின் மூலம் அவரது தலையை துண்டித்து போர்க்களத்தில் வென்றவர்.
பின்னர் அவரை நயவஞ்சகமாக பிடித்த வெள்ளைய அரசு பின்னர் சங்ககிரிக் கோட்டையில் வைத்து தூக்கிலிட்டது. அவரது பிறந்த தின விழா இன்று தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்ட ஆட்சியரகம் எதிரில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி, அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் துரைராஜ், தி.மு.க. பகுதி செயலாளர் கண்ணன், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu