அரசு கல்லூரி விடுதி முன் குப்பை குவியல்! பொதுமக்கள் கடும் அதிருப்தி..!

அரசு கல்லூரி விடுதி முன் குப்பை குவியல்! பொதுமக்கள் கடும் அதிருப்தி..!
X
அரசு கல்லூரி விடுதி முன் குப்பை குவியல் கிடப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் திருச்சி மாநகரில், பறவைகள் சாலையில் உள்ள அரசு கல்லூரி மாணவர் விடுதி முன் வீதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதும், குப்பைகள் காற்றில் பறந்து வீடுகளுக்குள் செல்வதும் பொதுமக்கள் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

திருச்சி மாநகராட்சி 53வது வார்டுக்கு உட்பட்ட பறவைகள் சாலையில் அமைந்துள்ள திருச்சி அரசு ஆண்கள் கல்லூரி மாணவர் விடுதி. இங்கு அருகாமையில் பல குடியிருப்புகளும், ரேஷன் கடை மற்றும் அறிவுசார் மைய கட்டிடமும் அமைந்துள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக சேகரிக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கும் இடத்துக்கு வாகனத்தில் ஏற்றி சென்று அங்கு சுத்தமாக டிஸ்போஸ் செய்துவிடுவார்கள். ஆனால் இந்த பகுதிகளில் சேமிக்கும் குப்பைகளை மாணவர் விடுதிக்கு அருகிலேயே கொட்டி வைத்துள்ளனர். இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் குப்பைகள் காற்றில் பறந்து விடுதிக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் சென்று விடுகின்றன.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை குப்பைகள் அகற்றப்படவில்லை.

தூய்மைப்பணியாளர்கள் குப்பைகளை சாலையில் கொட்டுவதை கண்காணிக்க வேண்டிய சுகாதார ஆய்வாளர்களும், அப்பகுதி கவுன்சிலரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

தூய்மையான மாநகராட்சி என்று பெயர் எடுக்க ஆங்காங்கே குப்பையில்லா வீதி என்று பெயர்பலகை வைத்து பொதுமக்களை வீதியில் குப்பை கொட்ட வேண்டாம் என்று கூறும் மாநகராட்சி நிர்வாகம், குப்பைகளை சாலையில் கொட்டும் தூய்மைப்பணியாளர்களை கண்காணிக்காத ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்