முழு ஊரடங்கு நாளான இன்று திருச்சி கடை வீதி வெறிச்சோடியது
முழு ஊரடங்கால் திருச்சி கடை வீதி வெறிச்சோடியது.
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வித்து நடைமுறையில் உள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும் கடந்த 6-ம் தேதி முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதியின்றி முழு முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 9-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை முதல் வார முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2-வது ஞாயிற்றுக் கிழமையான இன்று காலை முதல் முதல் (17ம் தேதி) காலை 5 மணி வரையிலான முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
திருச்சி மாநகரில் உள்ள 7 காவல் சோதனை சாவடிகள் தவிர, மாநகரில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கண்டறிந்து வாகனங்களை பறிமுதல் செய்ய மாநகரில் கூடுதலாக 31 காவல் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகள் வழக்கம் போல் எவ்வித தடையின்றி திறந்திருந்தது. மருந்து வாங்குவதற்கும், மருத்துவமனை செல்வதற்கும் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மருந்து வாங்குவதற்கு உரிய டாக்டரின் மருந்து சீட்டு இருந்தால் மட்டும் போலீசார் அனுமதித்தனர். மேலும் உணவகங்கள் பார்சலுக்கு மட்டுமே ஓட்டல்கள் திறந்திருந்தன. பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த முழு ஊரடங்கில் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், பொங்கல் விடுமுறை தினமான 14-ம்தேதி முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கும் கோயில்களில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்படும் என வும் அறிவிக்கப்பட்டது. இதனால் கோயில்களில் பக்தர்கள் இன்றி வெறிச் சோடியது. கடந்த 9-ம் தேதி முழு ஊரடங்கில், காரணமின்றி வெளியே சுற்றிதிரிந்த 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
முககவசம் அணியாமல் வந்த 600 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு ரூ.1.20 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த உத்தரவை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu