திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் டாக்டர் கணேஷ் அரவிந்த் ஒருவருக்கு ஆலோசனை வழங்கினார்.
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் கடந்த 10-ந்தேதி தொடங்கி 13-ந் தேதி(இன்று) வரை நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் சிறுநீரக சிகிச்சை மற்றும் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.கார்த்திகேயன், சிறுநீரக நோய்சிறப்பு மருத்துவர் டாக்டர் கணேஷ் அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு இந்த முகாமில் பங்குபெற்றவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்கினர்.
இதில் சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம், கை கால் வீக்கம், தற்காலிக சிறுநீரக பாதிப்பு, நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு, ரத்த சுத்திகரிப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகள் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரத்தம் கலந்து சிறுநீர் கழித்தல், சிறுநீரக கல் தொந்தரவு, சிறுநீரக கிருமி தொற்று, சிறுநீரக புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிறப்பு இலவச ஆலோசனைகளும், முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனைகளும் செய்யப்பட்டது.
மேலும் சிறப்பு சலுகையாக சிபிசி, யூரியா கிரியேட்டின், யூரின் ரொட்டின், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், யூ.எஸ்.ஜி அப்தமன், சிறுநீர் பரிசோதனைகள் தேவை பட்டவர்களுக்கு சலுகை விலையில் செய்யப்பட்டது. இம்முகாமில் 200-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேல்சிகிச்சைக்காக 75 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்டீபன், ஜெயபிரகாஷ் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu