மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு போட்டித்தேர்வில் பங்கேற்க இலவச பயிற்சி

மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு போட்டித்தேர்வில் பங்கேற்க இலவச பயிற்சி
X

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சி மாவட்டத்தில் மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு போட்டித்தேர்வில் பங்கேற்க இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

தமிழக மீன்வளம் நிதி பணியாளர் மற்றும் நிர்வாக சீர் திருத்த துறை அமைச்சர் 12.11.2017ம் அன்று சட்டபேரவையில் அறிவித்ததன் படி சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர் கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரிஇளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோh; விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் றறற.கiளாநசநைள.வn.பழஎ.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை திருச்சி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர்மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறையில் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 18.11.2023-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர்எண்.4 காயிதே மில்லத்தெரு, காஜாநகர் திருச்சி-20 (தொலைபேசி எண் - 0431 2421173) அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஆயுள் முழுக்க இதய நோய் வராம இருக்க இந்த வகை வாழைப்பழம் ஒன்னு போதும் ..! எப்படி சாப்பிடணும் ?