திருச்சியில் மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

திருச்சியில் மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி
X
திருச்சியில் மத்திய, மாநில அரசு பணி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கான போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சாh;ந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அனைவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயனடையுமாறும், பல்வேறு தேர்வு முகமையால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் வகுப்புகள் ஒளிப்பரப்பாகும் எனவும் தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் இதனைப் பார்த்து பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக் குறிப்புகள், சமச்சீர் புத்தகங்களின் மென் நகல், முந்தைய ஆண்டு வினாத்தாட்கள், பயிற்சி வகுப்புகளின் காணொளி காட்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் உள்ளன. இதனை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வேண்டு கோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
how to bring ai in agriculture