குரூப் 1 தேர்விற்கு திருச்சி மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பு
பைல் படம்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஸ்.சி 1) தொகுதி1-ற்கான 92 பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 29.08.2022 அன்று முதல் துவங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித்தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயனடையுமாறும், பல்வேறு தேர்வு முகமையால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் வகுப்புகள் ஒளிப்பரப்பாகும் எனவும் தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் இதனைப் பார்த்து பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், சமச்சீர் புத்தகங்களின் மென் நகல் முந்தைய ஆண்டு வினாத்தாட்கள், பயிற்சி வகுப்புகளின் காணொளி காட்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் உள்ளன. இதனை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu