முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது திருச்சி ஐ.ஜி.யிடம் நர்ஸ் புகார்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது திருச்சி ஐ.ஜி.யிடம் நர்ஸ் புகார்
X

கைக்குழந்தையுடன் நர்ஸ் திருச்சி ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு  அளிக்க வந்தார்.

முன்னாள் அமைச்சர் பெயரை சொல்லி ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக திருச்சி ஐ.ஜி. அலுவலகத்தில் நர்ஸ் புகார் மனு கொடுத்தார்.

திருச்சி திருவெறும்பூரை சேர்ந்தவர் ஜெனிபர் மற்றும் அவரது கணவர் பிரசாத் ஆவார்கள். இவர்கள் சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறி தனக்கு அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக திருவெறும்பூர் கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த லாசர், சூரியூரை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் தேனீர் பட்டியைச் சேர்ந்த வீரமணி ஆகியோர் தெரிவித்தனர்.

அதனை நம்பி நாங்கள் ரூ.4 லட்சம் கொடுத்தோம். ஆனால் என்னிடம் கூறியதுபோல் எனக்கு வேலை வாங்கித் தராமல் மூன்று பேரும் ஏமாற்றி விட்டனர். ஆகவே இதுகுறித்து நான் புகார் கொடுத்ததின் பேரில் லாசர் மீது மட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மற்ற இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே மற்ற இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து நான் கொடுத்த பணத்தை எனக்கு மீட்டுத்தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

கைக்குழந்தையுடன் ஐ.ஜி. அலுவலகத்தில் பெண் நர்ஸ் ஒருவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை சொல்லி மோசடி செய்தவர்கள் குறித்து புகார் மனு கொடுக்க வந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!