அ.தி.மு.க. அமைப்புச்செயலாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் நியமனம்

அ.தி.மு.க. அமைப்புச்செயலாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா  மனோகரன் நியமனம்
X
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற அமைப்பு செயலாளர் ஆர் மனோகரன்.
அ.தி.மு.க. அமைப்புச்செயலாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர். மனோகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. கட்சியில் இன்று 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளர்களாக திருச்சியைச் சேர்ந்த ஆர். மனோகரன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜி. பாஸ்கரன், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்பி அன்வர் ராஜா, வேலூர் புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் பி ராமு, சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராயபுரம் மனோ, மேலும் தஞ்சாவூரை சேர்ந்த துரை செந்தில், காந்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர். மனோகரன் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது சட்டமன்ற அரசு தலைமை கொறடா ஆக பணியாற்றினார். அப்போது அவர் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆகவும் இருந்தார்.

மேலும் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த மனோகரன் திருச்சியில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தி ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெற்றார். ஜெயலலிதா தனது வாயால் மலைக்கோட்டை மாநகரம் திருச்சியை மனோகரன் இரட்டை இலை கோட்டையாக மாற்றிவிட்டார் என புகழ்ந்து பேசி இருக்கிறார். அந்த அளவிற்கு அ.தி.மு.க.வில் அவருடைய செயல்பாடு தொண்டர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

அ.தி.மு.க.வில் அவர் அணி செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளையும், திருச்சி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் மற்றும் கோட்டத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்ட போது டி.டி.வி. தினகரன் கட்சிக்கு சென்ற மனோகரன் அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் காரணமாக அவருக்கு தற்போது அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai and future cities