திருச்சியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. முருகையா நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. முருகையா நினைவு தினம் அனுசரிப்பு
X

திருச்சியில் முன்னாள் எம்.பி.முருகையா படத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. முருகையா நினைவு தினத்தையொட்டி இன்று அவரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சியில் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகையா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம் சரவணன் கலந்துகொண்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் மலைக்கோட்டை முரளி, திலகர், பரமசிவம், சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், கலைப் பிரிவு ராஜீவ் காந்தி உறையூர் விஜி, மாரியப்பன், ராஜசேகர், நரேந்திரன், ஆட்டோ பாலு, பஜார் செந்தில்,இர்பான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story