1 கிலோ மல்லி எவ்வளவு ரூபாய் தெரியுமா? கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை!

1 கிலோ மல்லி எவ்வளவு ரூபாய் தெரியுமா? கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை!
X
திருச்சி காந்தி மார்க்கெட்டில் கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை!

ஆயுதபூஜையை முன்னிட்டு காந்திமார்க்கெட்டில் பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்தது

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதைப் போல திருச்சி காந்திமார்க்கெட்டிலும் பூக்களின் விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது.

இதனால் நேற்றே பூக்களை வாங்கி வைக்கும் நிலைமை ஏற்பட்டது. 2 நாட்களுக்கு முன்னதாகவே பூக்களை வாங்க பலரும் நினைத்ததால் பூக்களுக்கான டிமான்ட் எகிறியுள்ளது.

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகள் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ளன. இந்த இரண்டு பண்டிகைகளிலும் வீடுகள் மற்றும் கோயில்களை அலங்கரிக்க பூக்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. இதனால், பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ரூ.300-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை, முல்லை, ஜாதிபூ நேற்று ரூ.600-க்கு விற்கப்பட்டது. செவ்வந்தி ரூ.180 முதல் ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், அரளி ரூ.500-க்கும் பன்னீர்ரோஜா ரூ.200-க்கும், விருட்சிபூ-ரூ.250-க்கும் விற்கப்பட்டது.

இதேபோல், ஆயுதபூஜையின்போது பயன்படுத்தக்கூடிய பூஜை பொருட்களும் காந்திமார்க்கெட்டில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. வாழைத்தார், பூசணி, அவல், பொரி, கடலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

பூக்கள் விலை உயர்வால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இருந்தாலும் பண்டிகை கொண்டாடி ஆக வேண்டும் என்பதால் பூக்கள் விலை அதிகமாக இருந்தாலும் வியாபாரம் நடந்துகொண்டே தான் இருக்கிறது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare