திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த போது தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்

திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த போது தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்
X

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த போது தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி சிங்கார தோப்பு, தேரடி பஜார், என்.எஸ்.பி. ரோடு பகுதிகளில் ஏராளமான தரைக்கடைகள் உள்ளன. பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள் மற்றும் கைக்குட்டை உள்ளிட்டவற்றை வியாபாரிகள் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறார்கள். இதனை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் திருச்சி மாநகராட்சி இன்று அப்புறப்படுத்த முயற்சித்தது. ஜேசிபி எந்திரத்துடன் வந்த அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். இதனால் தரைக்கடை வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!