திருச்சியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

திருச்சியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு
X

திருச்சியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கே.என். நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி கோரையாற்றின் கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரினை அகற்றிடவும், கரைகளை மேலும் பலப்படுத்தி மழைநீர் உள்ளே வராத அளவிற்கு நடவடிக்கை எடுத்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் இப்பகுதி மக்களுக்கு உணவும் வழங்கினார். தொடர்ந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை கண்காணிப்புடன் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சருடன் மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு மற்றும் செயற் பொறியாளர்கள்,மாநகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், முன்னாள் துணை மேயர் அன்பழகன் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!