மோசமான வானிலை காரணமாக திருச்சியிலிருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து

மோசமான வானிலை காரணமாக திருச்சியிலிருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து
X
பைல் படம்.
மோசமான வானிலை காரணமாக திருச்சியிலிருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிலிருந்து நேற்று காலை திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்தது. அந்த விமானம் மீண்டும் சென்னை செல்வதற்கு ஆயத்தமானது.

ஆனால், சென்னையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்த மற்றொரு சிறிய விமானம் காலியாக கொச்சி நோக்கி மாலை 4-30 மணிக்கு புறப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு