விமான கோளாறு காரணமாக இலங்கை விமானம் ரத்து
திருச்சியில் இருந்து இலங்கைக்கு சிறப்பு மீட்பு விமானமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் காலை 9 மணிக்கு திருச்சிக்கு வந்து, பின்னர் காலை 10.10 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்பு நோக்கி புறப்பட்டுச் செல்வது வழக்கம்.
இதன்படி நேற்று காலை திருச்சி வந்த இந்த விமானம், பின்னர் 120 பயணிகளுடன் கொழும்பு நோக்கி புறப்பட்டது. ஓடுதளம் வரை விமானம் சென்ற நிலையில், அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டு, விமானத்தில் இருந்த 120 பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். பின்னர் அவர்கள் விமான நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பயணிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பில் இருந்து திருச்சிக்கு வந்த சிறப்பு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விமான நிறுவனத்தின் சார்பில் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu